அமர்நாத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் நிலையில் பாகிஸ்தான், சீனா மவுனம் காக்கிறது
அமர்நாத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் நிலையில் அண்டைய நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து மவுனம் காக்கிறது.
புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பஸ்சில் சென்ற பக்தர்கள் மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் இறந்தனர். 19 பேர் காயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ஜெர்மனி, நார்வே, ரஷியா, கனடா, ஈரான், பூடான், மாலத்தீவு, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை உள்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
போர்ச்சுக்கல், ஸ்பெயின் நாட்டு தலைவர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது படையெடுக்கும் அடக்கு முறையாளர்களை இஸ்லாமியர்கள் கண்டிக்க வேண்டும் என ஈரானிய தலைவர் காமெனி சமீபத்தில் கூறியிருந்தார். அந்நாடும் அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆனால் இந்தியாவின் அண்டைய நாடுகளில் ஒன்றான சார்க் அமைப்பில் இடம் பெற்று உள்ள பாகிஸ்தான் மற்றும் மற்றொரு அண்டைய நாடான சீனாவும் அமர்நாத் யாத்திரை தாக்குதல் தொடர்பாக எந்தஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறது.
அமர்நாத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி முகமது இஸ்லாமியிலை வேட்டையாடும் பணியை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story