இந்தி நடிகர் திலீப்குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் டாக்டர் தகவல்

உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நடிகர் திலீப்குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.
மும்பை,
உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நடிகர் திலீப்குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.
திலீப்குமார்பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் சிறுநீரக பிரச்சினை, நீர்ச்சத்து குறைவு காரணமாக மும்பை பாந்திராவில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 94 வயது நடிகர் திலீப்குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஜலீல் பர்கார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘‘திலீப்குமார் நலமாக இருக்கிறார். அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படவில்லை. செயற்கை சுவாசமும் பொருத்தப்படவில்லை. அவரது சிறுநீரகம் நன்றாக செயல்படுகிறது’’ என்றார்.
குடும்ப நண்பர் கருத்துஇதனிடையே, நடிகர் திலீப்குமாரின் குடும்ப நண்பர் பைசல் பாரூக் என்பவர் சமூக வலைத்தளத்தில் திலீப்குமாரின் உடல்நிலை பற்றி கருத்து பதிவு செய்திருந்தார்.
அதில், ‘‘திலீப்குமார் மிகவும் நலமாக இருக்கிறார். தயவுசெய்து அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்திடுங்கள். அவரது மனைவி சைரா பானுவுடன் லீலாவதி ஆஸ்பத்திரியை சேர்ந்த தலைசிறந்த டாக்டர்களும், ஊழியர்களும் 24 மணிநேரமும் அவரை கண்காணித்து வருகிறார்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.