சபரிமலை விமான நிலையம் அமைக்க ஆலோசகரை தேடுகிறது கேரள அரசு

சபரிமலையில் விமான நிலையம் அமைக்க ஆலோசகரை நியமிக்க கேரள அரசு தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளது.
திருவனந்தபுரம்
தேர்வு செய்யப்பட்ட நிறுவனம் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும். தற்போது விமான நிலையம் அமைக்க ஐயப்பன் கோயிலில் இருந்து 48 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சேருவல்லி எஸ்டேட்டை தேர்வு செய்துள்ளனர். இங்கு 2,263 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த நிலம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது.
கேரள மாநில தொழில் மேம்பாட்டு வாரியம் திட்டத்திற்கு பொருத்தமான ஆலோசகரை தேடித்தரும் என்று கூறினார் முதல்வர் பினராயி விஜயம். திட்டத்திற்கான நில கையகப்படுத்தும் வேலையை அரசு இன்னும் துவங்கவில்லை என்றார். நிலம் அரசின் வருவாய் ஆவணங்களின்படி அரசுடையது என்றார் முதல்வர்.
ஆண்டு தோறும் பெருகி வரும் பக்தர்களின் எண்ணிக்கையை சமாளிக்க விமான நிலையம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story