சராயு நதிக்கரையில் ராமருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்க உத்தர பிரதேச அரசு திட்டம்

உத்தர பிரதேசத்தின் சரயு நதிக்கரையில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
லக்னோ,
பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் உத்தர பிரதேசத்தில் ராமருக்கு மிகப்பிரம்மாண்டமான சிலை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள சராயு நதிக்கரையில் பிரம்மாண்ட சிலையை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி, இந்த இடத்தில் இருந்து வெகு தூரத்தில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. நூறு அடி உயரத்திற்கும் மேலாக இந்த சிலை அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
உத்தர பிரதேசத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் துவக்க நிலையில் மட்டுமே இருப்பதாகவும், உத்தர பிரதேசத்தின் சுற்றுலாவை ஊக்குவிக்க உள்ள பல திட்டங்களில் இதுவும் ஒன்று என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Related Tags :
Next Story