பயங்கரவாதிகளுக்கு வெடிப்பொருட்களை சப்ளை செய்த 2 காஷ்மீர் போலீசார் கைது

பயங்கரவாதிகளுக்கு வெடிப்பொருட்களை சப்ளை செய்த இரு காஷ்மீர் போலீசார் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்திற்கு வெடிப்பொருட்களை சப்ளை செய்ததாக இரு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். போலீசார் மற்றும் பயங்கரவாதிகள் இடையே வலைபின்னல் உறவு நீடிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தெற்கு மற்றும் மத்திய காஷ்மீரில் செயல்படும் கடைசி கட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கு கான்ஸ்டபிள் ஷாபீர் அகமது மாலிக் மற்றும் ஜாகிர் அகமது நாஜர் ஏகே ரக துப்பாக்கிகளுக்கு தேவையான வெடிப்பொருட்களை வழங்கி உள்ளனர் என போலீஸ் தெரிவித்து உள்ளது. பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இருவரையும் போலீஸ் கைது செய்து உள்ளது. போலீசார் மற்றும் பயங்கரவாதிகள் இடையிலான சட்டவிரோத வலைபின்னல் உறவானது வெளியே தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் டிஜிபி எஸ்.பி. வாய்த் பேசுகையில், “இதுபோன்ற நடவடிக்கையை நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும்,” என கூறினார்.
ஜம்மு காஷ்மீர் போலீஸில் கண்காணிப்பு குழு வலுவாக உள்ளது, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிக்கவும் முடியாது என குறிப்பிட்டு உள்ளார். தெற்கு காஷ்மீரின் ராம்நகரியில் சட்டவிரோத வெடிப்பொருள் சப்ளை வலைபின்னலுடன் தொடர்புடைய ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது நாக்ரோவை போலீஸ் கைது செய்து உள்ளது. அவனிடம் இருந்து போலீஸ் வெடிப்பொருட்களை பறிமுதல் செய்து உள்ளது. அவனிடம் விசாரித்த போது மற்றொருவன் அமது மிர் எனவும் தெரியவந்து உள்ளது, அவனையும் போலீஸ் கைது செய்து உள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது என போலீஸ் தெரிவித்து உள்ளது.
விசாரணையின் போது போலீசார் மற்றும் பயங்கரவாதிகள் இடையே சட்டவிரோதமான வகையில் வெடிப்பொருட்கள் சப்ளை நடந்து உள்ளது என்பது உறுதியாகி உள்ளது.
Related Tags :
Next Story