3 மாநிலங்களில் மாலையில் 3 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


3 மாநிலங்களில் மாலையில் 3 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 Oct 2017 1:17 PM GMT (Updated: 13 Oct 2017 1:17 PM GMT)

பஞ்சாப், அரியானா மற்றும் சண்டிகாரில் மாலையில் 3 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.


புதுடெல்லி,

தீபாவளியை முன்னிட்டு, டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது, காற்று மாசுபாடு அதிகரித்ததன் காரணமாக இந்த தடை விதிக்கப்படுவதாக கூறியது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை அடுத்து 4 நாட்கள் கழித்து சண்டிகார் ஐகோர்ட்டு, பஞ்சாப், அரியானா மற்றும் சண்டிகாரில் மாலையில் 3 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. தீபாவளி அன்று மாலை 6.30 மணியிலிருந்து 9.30 மணி வரையிலே பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மாலை 6.30 மணிக்கு முன்னரோ, 9.30 மணிக்கு பின்னரோ பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

அதேபோன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகளை அமைக்கும் விவகாரத்திலும் கட்டுப்பாட்டிற்கு வழிவகை செய்து உள்ளது.

தீபாவளியை ஒட்டி தற்காலிக பட்டாசு கடைகளை அமைக்க கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உரிமங்களில், இந்த ஆண்டு வெறும் 20 சதவிதம் மட்டுமே உரிமம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

Next Story