காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷா மற்றும் ஹவாலா வர்த்தகர் வானி மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா மற்றும் ஹவாலா வர்த்தகர் முகமது அஸ்லாம் வானி ஆகியோருக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டை பதிவு செய்தது.
புதுடெல்லி,
பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் உடன் தொடர்பு கொண்டவர் ஷா என குற்றம் சாட்டி அமலாக்க துறை அவர் மீது கடந்த செப்டம்பர் 23ந்தேதி குற்றச்சாட்டு அறிக்கையை தாக்கல் செய்தது.
அவருக்கு உதவியவர் என வானியின் பெயரும் அறிக்கையில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஷா மற்றும் வானி இருவரும் நீதிமன்ற காவலில் உள்ளனர். 700 பக்கங்கள் கொண்ட குற்றச்சாட்டு அறிக்கையில் 19 சாட்சிகளும் உள்ளனர்.
இந்த வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் செசன்ஸ் நீதிபதி சித்தார்த் சர்மா இருவர் மீதும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து கொண்டார். இரு குற்றவாளிகளும் குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினர்.
Related Tags :
Next Story