காதல் திருமணம் செய்ததாக கூறி தம்பதிகளை பள்ளியில் இருந்து நீக்கிய நிர்வாகம்

காதல் திருமணம் செய்ததாக கூறி தம்பதிகளை பள்ளியில் இருந்து நீக்கிய நிர்வாகம், இவர்கள் காதல் "மாணவர்களை மோசமாக பாதிக்கலாம்" என்று நிர்வாகம் கூறி உள்ளது.
ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீர் புலவாமா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தாரிக் பட் மற்றும் சுமயா பஷீர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் ஜோடி கடந்த நவம்பர் 30 ந்தேதி திருமணம் செய்து கொண்டது. திருமண நாள் அன்று இருவரும் பள்ளியில் இருந்து நிர்வாகத்தால் நீக்கபட்டனர். இவர்கள் காதல் "மாணவர்களை மோசமாக பாதிக்கலாம்" என்று நிர்வாகம் கூறி உள்ளது.
இது குறித்து பள்ளியின் நிர்வாகி பஷீர் மசூதி கூறும் போது,
இவர்களின் காதல் இங்கு படிக்கும் 2 ஆயிரம் மாணவர்களுக்கும் 200 ஆசிரியர் ஆசிரியைகளுக்கும் நல்லது அல்ல.
ஆனால் இந்த ஜோடி தங்கள் திருமணம் காதல் திருமணம் அல்ல ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தான் என கூறி உள்ளது.
இது குறித்து பட் கூறியதாவது:-
எங்கள் திருமண ஒரு ஏற்பாடு செய்யபட்ட திருமணம் . ஒரு சில மாதங்களுக்கு முன்னர் நாங்கள் நிச்சயம் பண்ணி இருந்தோம்.
முழு பள்ளி கூடத்திற்கும் இது பற்றி தெரியும் சுமையா நிச்சயதார்த்த விழாவின் போது பள்ளியின் ஊழியர்கள் ஆசிரியர்- ஆசிரியைகளுக்கு விருந்து வழங்கப்பட்டது எங்களுக்கு விளக்கம் அளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வில்லை.
நாங்கள் ஒருமாதம் திருமணத்திற்காக விடுமுறை கேட்டு இருந்தோம் அதை பள்ளி நிர்வாகமும் அனுமதித்தது என கூறினார்.
இந்த ஜோடி தங்களை பள்ளி நிர்வாகம் கலங்கபடுத்தி விட்டதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
Related Tags :
Next Story