பாகிஸ்தான் அதிகாரிகளை சந்தித்ததற்கு காங்கிரஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் மந்திய மந்திரி


பாகிஸ்தான் அதிகாரிகளை சந்தித்ததற்கு காங்கிரஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் மந்திய மந்திரி
x
தினத்தந்தி 15 Dec 2017 12:40 PM GMT (Updated: 15 Dec 2017 12:39 PM GMT)

பாகிஸ்தான் அதிகாரிகளை சந்தித்ததற்கு காங்கிரஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆனந்த் சர்மா கூறி உள்ளார்.


புதுடெல்லி,


குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுடன் இணைந்து சதிதிட்டம் தீட்டுவதாக குற்றம் சாட்டினார். இவ்விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியிருந்தார். காங்கிரஸ் கட்சியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். காங்கிரஸ் மாநிலங்களவை இப்பிரச்சனையை எழுப்பி அமளியை ஏற்படுத்தியது. இதனால் அவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தேசிய ஜனநாய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டத்தை அடுத்து மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி ஆனந்த் குமார் பேசுகையில், பாகிஸ்தான் அதிகாரிகளை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சந்தித்து பேசியதற்கு அக்கட்சிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிஉள்ளார். 

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசுகையில், அவர்கள் தேர்தல் கணிப்புகளை கண்டு அச்சம் கொள்வது ஏன்? முழு முடிவும் வரட்டும் அவர்கள் இன்னும் அதிகமாக அதிர்ச்சி அடைவார்கள். பிரதமர் மோடிக்கு பின்னால் தேசல் கல் பாறையை போன்று நிற்கிறது, காங்கிரசால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறிஉள்ளார். 

Next Story