காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்பு: காங். தலைமையகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்க உள்ளார். இதன் காரணமாக காங்கிரஸ் தலைமையகத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
புதுடெல்லி,
சோனியா காந்தி சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் அவரால் நேரடியாக பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. மூத்த நிர்வாகிகளை வீட்டுக்கு அழைத்து கட்சி தொடர்பாக ஆலோசனை வழங்கி வந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக 11–ந் தேதி ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று (சனிக்கிழமை) முறைப்படி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கிறார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ளதையொட்டி டெல்லியில், உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இனிப்புகளுடன் தொண்டர்கள் வருகை வந்துள்ளனர். துக்ளக் லேன் பகுதியில் உள்ள, ராகுல் காந்தியின் இல்லத்தின் முன்பும் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
Related Tags :
Next Story