ரேபரலி தொகுதியில் சோனியா காந்தி மீண்டும் போட்டியிடுவார்: பிரியங்கா காந்தி தகவல்


ரேபரலி தொகுதியில் சோனியா காந்தி மீண்டும் போட்டியிடுவார்: பிரியங்கா காந்தி தகவல்
x
தினத்தந்தி 16 Dec 2017 8:56 AM GMT (Updated: 16 Dec 2017 8:56 AM GMT)

ரேபரலி தொகுதியில் சோனியா காந்தி மீண்டும் போட்டியிடுவார் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி தனது கணவருடன் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியின் போது, தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “ரேபரலி தொகுதியில் நான் போட்டியிடப்போகிறேன் என்ற கேள்விக்கே இடம் இல்லை. எனது தாயார் (சோனியா காந்தி)தான் அந்த தொகுதியில் போட்டியிடுவார். நான் பார்த்ததிலேயே மிகவும் துணிச்சலான பெண் எனது தாயார் தான்” என்றார். 

2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது ரேபரலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார் என்று கடந்த சில தினங்களாக ஊகங்கள் வெளியான நிலையில் பிரியங்கா காந்தி மேற்கண்ட பதிலை அளித்துள்ளார். 

Next Story