குஜராத் சட்டமன்ற தேர்தல்: போட்டியிட்ட பெரும்பான்மை தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த ஆம் ஆத்மி!


குஜராத் சட்டமன்ற தேர்தல்: போட்டியிட்ட பெரும்பான்மை தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த ஆம் ஆத்மி!
x
தினத்தந்தி 18 Dec 2017 3:34 PM GMT (Updated: 18 Dec 2017 3:34 PM GMT)

குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பெரும்பான்மை தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பாஜக மீண்டும் தக்க வைத்துள்ளது. தொடர்ந்து 6-வது முறையாக குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், குஜராத்தில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, போட்டியிட்ட பெரும்பான்மையான இடங்களில் டெபாசிட்டை கூட பெற முடியாமல் தோல்வியை சந்தித்து இருக்கிறது. 

182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கிட்டதட்ட 30 தொகுதிகளில் போட்டியிட்டது. இவற்றில் 2 தொகுதிகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் வாக்குகளை பிரித்துள்ள ஆம் ஆத்மி, ஏனைய அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை கூட பெற முடியாமல் தோல்வியை தழுவியது. இவற்றில் சில தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களை கூட தாண்டவில்லை.  

சோட்டா உதேபூர் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அருன்பாய் வெர்சிங்பா ரத்வா, பெற்ற 4,500 வாக்குகளே ஆம் ஆத்மி வேட்பாளர் குஜராத்தில் பெற்ற அதிக வாக்குகளாக பதிவாகியுள்ளது. இந்த தொகுயில் ஆம் ஆத்மி வேட்பாளர் கணிசமாக வாக்குகளை பிரித்ததால், சோட்டா உதேபூர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி அடைந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மோகன்சின் சோடுபாய் ரத்வா ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 


Next Story