ஜெயலலிதா மரணம் தொடர்பாக திவாகரன் கூறிய கருத்து பற்றி தனக்கு எதுவும் தெரியாது: டிடிவி தினகரன்


ஜெயலலிதா  மரணம் தொடர்பாக திவாகரன் கூறிய கருத்து பற்றி தனக்கு எதுவும் தெரியாது: டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 17 Jan 2018 2:38 PM GMT (Updated: 17 Jan 2018 2:49 PM GMT)

ஜெயலலிதா மரணம் தொடர்பாக திவாகரன் கூறிய கருத்து பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #ttvdhinakaran

கோவை,

சசிகலா சகோதரர் திவாகரன் மன்னார்குடியில்  நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசும் போது, ”2016  - டிசம்பர் 4-ந்தேதி மாலை 5-15 மணிக்கே மாரடைப்பால்  ஜெயலலிதா இறந்து விட்டார். 4 ந்தேதி இரவே நான் அங்கு சென்றேன். ஜெயலலிதா மரணத்தை ஏன் அறிவிக்க வில்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது. ரெட்டி  எங்கள் மருத்துவமனையின் கிள்ளைகள் தமிழகம் முழுவதும் உள்ளது எங்களுக்கு பாதுகாப்பு  கொடுங்கள் என கேட்டார். மருத்துவமனையின் பாதுககாப்புக்காக  ஒரு நாள் தாமதமாக ஜெயலலிதா மரணம் அறிவிக்கப்பட்டது என கூறினார்” இவ்வாறு திவாகரன் தெரிவித்தார். 

ஜெயலலிதா மரணம் பற்றி ஏற்கனவே பல்வேறு சந்தேகங்கள்  பரவலாக எழுப்பப்படுகிறது. ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அங்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திவாகரனின் கருத்து  மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன், ஜெயலலிதா மரணம்  தொடர்பாக திவாகரன் கூறிய கருத்து பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும்,  திவாகரன் கருத்து பற்றி அப்பல்லோ நிர்வாகம்தான் பதில் சொல்ல வேண்டும். டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு இருதய செயலிழப்பு ஏற்பட்டு எக்மோ  கருவி பொருத்தப்பட்டது. ஜெயலலிதா மரண விவகாரத்தில் விசாரணை ஆணையம் மூலமாக உண்மை வெளிவரும். வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை” என்றார். 

Next Story