மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

சுவீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். #PMModi
பெர்லின்,
மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். சுவீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற 25-வது காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதன் பின்னர், ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, பெர்லினில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேசினார்.
பின்னர், ஏஞ்சலா மெர்க்கல், பிரதமர் மோடிக்கு இரவு உணவு விருந்து அளித்தார்.
இதையடுத்து, தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளார். இன்று காலை பிரதமர் மோடி டெல்லி வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story