மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார் எடியூரப்பா; 17-ம் தேதி பதவியேற்பு விழா

அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது பாரதீய ஜனதா, மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார் எடியூரப்பா. 17ம் தேதி பதவியேற்பு விழா நடக்கிறது. #KarnatakaElection2018
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கி நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா 115-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இங்கு ஆட்சி அமைக்கும். தற்போது தேவையான 113 க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார் எடியூரப்பா.
தனது இல்லத்தில் வழிபாடு நடத்திய பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறும்போது, 17-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என்று தகவல் தெரிவித்து உள்ளார்.
பாஜகவின் எடியூரப்பா நாளை மறுநாள் (17-ஆம் தேதி) பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. தேர்தல் நடைபெற்ற நாளிலேயே 17-ஆம் தேதி பதவியேற்பு விழா என நாள் குறித்தவர் எடியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேவகவுடா கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை என பாரதீய ஜனதா திட்டவட்டமாக கூறி உள்ளது.
Related Tags :
Next Story