தேசிய செய்திகள்

கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பதாமி தொகுதியில் வெற்றி + "||" + Karnataka Chief Minister Siddaramaiah wins Badami assembly seat

கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பதாமி தொகுதியில் வெற்றி

கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பதாமி தொகுதியில் வெற்றி
கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி சித்தராமையா பதாமி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். #KarnatakaElections2018
பெங்களூரு,

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஜெயநகர், ராஜராஜேஸ்வரி நகர் தவிர்த்து 222 தொகுதிகளுக்கு கடந்த 12ந்தேதி தேர்தல் நடந்தது.  இந்த தேர்தலில், காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே கடும் போட்டி இருந்து வந்தது. 

இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டு இருந்தன.  அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் பாரதீய ஜனதா 102 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.  அக்கட்சியின் முதல் மந்திரி வேட்பாளரான எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கைவசமில்லாத காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.  இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல் மந்திரி சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

இதில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவர் தோல்வியுற்றார்.  அதேவேளையில், பதாமி தொகுதியில் சித்தராமையா வெற்றி பெற்றுள்ளார்.