தேசிய செய்திகள்

நிரவ் மோடி மோசடி செய்த தொகை ரூ.14,356 கோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கி தகவல் + "||" + Nirav Modi fraudulent Rs 14,356 crore

நிரவ் மோடி மோசடி செய்த தொகை ரூ.14,356 கோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கி தகவல்

நிரவ் மோடி மோசடி செய்த தொகை ரூ.14,356 கோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கி தகவல்
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டனர்.

மும்பை,

வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் அளித்த நிலையில் நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் வெளிநாட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நிரவ் மோடி அவருடைய குடும்பத்தினர் தவிர, பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் 4 உயர் அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்ட இருந்தன.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31–ந் தேதியுடன் முடிவடைந்த 4–ம் காலாண்டில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி தனது வழக்கமான அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், “நிரவ் மோடி வங்கிக்கு செலுத்தவேண்டிய ஒட்டு மொத்த கடன் தொகை ரூ.14,356 கோடி ஆகும். வங்கி உறுதியளிப்பு கடிதங்களை தவறான முறையில் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளிலும் இந்த மோசடி நடந்து இருக்கிறது. இதில் நிரவ் மோடியின் ஆபரண நிறுவனமும், பஞ்சாப் நே‌ஷனல் வங்கி அதிகாரிகள் சிலரும் ஈடுபட்டு உள்ளனர்“ என்று கூறப்பட்டு இருக்கிறது.