கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை குமாரசாமி சொல்கிறார்

கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை என குமாரசாமி கூறி உள்ளார். #HDKumaraswamy
பெங்களூர்
மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் குமாரசாமி தலைமையில் தொடங்கியது.
கூட்டத்திற்கு முன் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது;-
எங்கள் எம்.எல்.ஏக்கள் யாரும் வேட்டையாடப்பட வில்லை என்பதை நாங்கள் உறுதிபடுத்தி உள்ளோம். எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டத்திற்கு பிறகு அடுத்த கட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே முடிவு எடுத்ததுபோல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story