ரூ.100 கோடி, அமைச்சர் பதவி தருவதாக எம்.எல்.ஏக்களுக்கு ஆசை காட்டும் பா.ஜ.க -குமாரசாமி

ரூ.100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என எம்.எல்.ஏக்களுக்கு ஆசை காட்டுகிறது பா.ஜ.க என குமாரசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
பெங்களூரு
கர்நாடக சட்டமன்ற மதச்சார்பற்ற ஜனதா தள குழு தலைவராக குமாரசாமி தேர்வுசெய்யப்பட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரதீய ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் உடன் மட்டுமே கூட்டணி . ரூ.100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என எம்.எல்.ஏக்களுக்கு பாரதீய ஜனதா ஆசை காட்டுகிறது. குதிரை பேரத்தில் பாஜக ஈடுபடும் நிலையில் வருமானவரித்துறை என்ன செய்கிறது. எங்கள் கட்சியை ஒழிக்க வேண்டும் என சிலர் செயல்பட்டதால் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.
அதிகாரத்திற்காக ஆசைப்படவில்லை, பிரதமர் பதவியை நாட்டு நலனுக்காக உதறிவிட்டு வந்தது எங்கள் குடும்பம்.
குதிரை பேரம் நடைபெறுவதை ஜனாதிபதியும் கவர்னரும் அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story