எல்லையில் அத்துமீறல், இந்திய ராணுவத்தின் பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான் வீரர்கள் மன்றாடல்!


எல்லையில் அத்துமீறல், இந்திய ராணுவத்தின் பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான் வீரர்கள் மன்றாடல்!
x
தினத்தந்தி 20 May 2018 10:05 AM GMT (Updated: 20 May 2018 10:16 AM GMT)

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் சரமாரியான பதிலடியை கொடுத்தது. #BSF #PakistanRangers

புதுடெல்லி,

காஷ்மீரில் ரம்ஜான் மாதத்தில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது, இதுதொடர்பான உத்தரவு பாதுகாப்பு படைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இருப்பினும் சமீப காலமாக எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து காணப்படுகிறது. பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் பயணம் செய்த நிலையில் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக உள்ளனர் என ஏற்கனவே உளவுத்துறை எச்சரிக்கை வெளியாகியது, இதனையடுத்து எல்லையில் பாதுகாப்பு அதிஉயர் உஷார் நிலைப்படுத்தப்பட்டது.

இன்று எல்லையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படைகளுக்கு இந்திய ராணுவம் சரமாரியான பதிலடியை கொடுத்து உள்ளது. சர்வதேச எல்லையில் இந்திய ராணுவம் கொடுத்த அடியில் தாங்க முடியாத பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தாக்குதலை நிறுத்துக்கள் என கெஞ்சி உள்ளனர் என எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானின் நிலைகள் சிதைக்கப்பட்டு உள்ளது, பாகிஸ்தான் படைக்கு பெரும் உயிரிழப்பும் நேரிட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. சர்வதேச எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது. பாகிஸ்தான் நிலைகள் சிதைப்பு உள்ளிட்ட காட்சிகள் அதில் அடங்கி உள்ளது.

 “ஜம்மு பிராந்திய எல்லைப் பாதுகாப்பு படைக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் படை, எல்லையில் தாக்குதலை நிறுத்துக்கள் என மன்றாடியது,” என எல்லைப் பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் கூறிஉள்ளார். 

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ச்சியாக அத்துமீறி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது, அதற்கு பதிலடியாகதான் இப்போது தாக்குதல் எடுக்கப்பட்டு உள்ளது எனவும் எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
 “கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் படைகள் எங்கெல்லாம் அத்துமீறியதோ அங்கெல்லாம் அவர்களுடைய நிலைகளை இந்திய ராணுவம் சிதைத்து உள்ளது,” எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
ஜம்முவில் சர்வதேச எல்லையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். பொதுமக்களும் உயிரிழந்து உள்ளனர். பிரதமர் மோடி ஜம்முவிற்கு நேற்று சென்ற நிலையில் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இவ்வாண்டும் பாகிஸ்தான் பலமுறை சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் அத்துமீறி தாக்குதலை நடத்தி உள்ளது. இதுபோன்று 700 சம்பவங்கள் நடைபெற்று உள்ளது, இதில் 18 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 38 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்து உள்ளனர். இந்திய படைகளும் பதிலடியை கொடுத்து வருகிறது.


Next Story