அக்டோபர் 2-ந்தேதி ‘சைவ உணவு தினம்’ மத்திய அரசுக்கு ரெயில்வே பரிந்துரை


அக்டோபர் 2-ந்தேதி ‘சைவ உணவு தினம்’ மத்திய அரசுக்கு ரெயில்வே பரிந்துரை
x
தினத்தந்தி 20 May 2018 9:45 PM GMT (Updated: 20 May 2018 9:39 PM GMT)

தேசத்தந்தை காந்தியடிகளின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு வருகிற அக்டோபர் 2-ந்தேதி முதல் 2020 அக்டோபர் 2 வரை சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

புதுடெல்லி,

2018, 2019, 2020 ஆகிய 3 ஆண்டுகளும் அக்டோபர் 2-ந்தேதியை ‘சைவ உணவு தின’மாக கடைப்பிடிக்க அனுமதி கேட்டு மத்திய கலாசாரத்துறை அமைச்சகத்துக்கு ரெயில்வே துறை கடிதம் எழுதியுள்ளது.

ரெயில்வேயின் இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் இந்த 3 ஆண்டுகளிலும் அக்டோபர் 2-ந்தேதியன்று ரெயில்கள் மற்றும் ரெயில்வே வட்டாரங்களில் அசைவ உணவு எதுவும் பரிமாறப்படாது.

காந்தியடிகள் தண்டி யாத்திரை மேற்கொண்ட தினமான மார்ச் 12-ந்தேதி சபர்மதியில் இருந்து, காந்தியுடன் தொடர்புடைய பல இடங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை மேற்கொள்ள ரெயில்வே முடிவு செய்துள்ளது. 

Next Story