காஷ்மீரில் ரமலான் தொழுகையை அடுத்து வெடித்த மோதலில் 20 வயது இளைஞர் உயிரிழப்பு


காஷ்மீரில் ரமலான் தொழுகையை அடுத்து வெடித்த மோதலில் 20 வயது இளைஞர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 Jun 2018 7:12 AM GMT (Updated: 16 Jun 2018 7:12 AM GMT)

காஷ்மீரில் ரமலான் தொழுகையை அடுத்து வெடித்த மோதலில் 20 வயது இளைஞர் உயிரிழந்தார்.



ஸ்ரீநகர்,

உலகம் முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டத்தில் ரமலான் தொழுகையை அடுத்து உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் வெடித்தது. பாதுகாப்பு படையினரை நோக்கி இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதலை முன்னெடுத்து உள்ளனர். இதனையடுத்து இருதரப்பு இடையே நேரிட்ட மோதலில் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த ஷீராக் அகமது என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போலீசார் கூட்டத்தை கலைக்க கேஸ் ஷெல் மற்றும் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளது. ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழந்தை கண்டித்து போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர் என போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் ரமலான் மாதத்தை முன்னிட்டு பயங்கரவாத வேட்டையை பாதுகாப்பு படை நிறுத்தியது, சண்டை நிறுத்தம் செய்யப்பட்டது. இருப்பினும் பயங்கரவாதிகள் தரப்பில் அவ்வபோது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. 

Next Story