பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு 568 கிலோ எடை கொண்ட லட்டு படைக்கப்பட்டது


பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு 568 கிலோ எடை கொண்ட லட்டு படைக்கப்பட்டது
x
தினத்தந்தி 17 Sep 2018 1:30 PM GMT (Updated: 2018-09-17T19:00:23+05:30)

பிரதமர் மோடியின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு 568 கிலோ எடை கொண்ட லட்டு ஒன்று படைக்கப்பட்டது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 68வது பிறந்த நாள் ஆகும்.  இதனை முன்னிட்டு சர்வதேச சமூக சேவை அமைப்பு ஒன்று டெல்லியில் நடத்திய நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜாவடேகர் மற்றும் மத்திய சிறுபான்மை விவகார துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ஜாவடேகர், நாட்டில் கடந்த 4 வருடங்களில் சுகாதாரம் பேணுவது அதிகரித்து உள்ளது.  தூய்மை பிரசாரம் வழியே 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன.  450 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி மலம் கழிப்பதில் இருந்து விடுபட்டு உள்ளன.

நாட்டில் முதல் 60ல் இருந்து 62 வருடங்களில் 30 சதவீதம் அளவிற்கே சுகாதாரம் பேணப்பட்டு வந்தது.  மோடி தலைமையின் கீழ் 90 சதவீதம் அளவிற்கு சுகாதாரம் பேணப்பட்டு வருகிறது என கூறினார்.  சுகாதாரம் பெரிய இயக்கம் ஆகியுள்ளது என நக்வி கூறினார்.


Next Story