பிரதமர் மோடியுடன் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி சந்திப்பு


பிரதமர் மோடியுடன் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி சந்திப்பு
x
தினத்தந்தி 19 Sept 2018 12:52 PM IST (Updated: 19 Sept 2018 12:52 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, ஒருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்தார். இன்று காலை டெல்லிக்கு வந்த அஷ்ரப் கானிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியை அஷ்ரப் கானி சந்தித்து பேசினார். 

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு, தலீபான்களுடனான சமரச உடன்படிக்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு  இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

ஆப்கானிஸ்தானில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஷ்ரப் கானியின் இந்தியப்பயணம் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு பணிகளின் நிலவரம் பற்றியும் இரு தலைவர்களும் ஆலோசித்ததாக செய்திகள் கூறுகின்றன. 

1 More update

Next Story