எல்லையில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, ராணுவ வீரர் உயிரிழப்பு


எல்லையில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, ராணுவ வீரர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 Sep 2018 9:28 AM GMT (Updated: 2018-09-24T14:58:50+05:30)

எல்லையில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகளை இந்திய ராணுவப்படை சுட்டு வீழ்த்தியது.


ஜம்மு,


பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுப்பதும், அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின் இதுபோன்ற அடாவடி செயல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குபுவாரா மாவட்டம் தாங்தார் செக்டாரில் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நேற்று இரவு நுழைய முயற்சி மேற்கொண்டார்கள். அவர்களை இந்திய பாதுகாப்பு படை தடுத்து நிறுத்தியது. இருதரப்பு இடையே துப்பாக்கி சண்டை தொடங்கியது. இன்று வரையில் நீடித்த துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சண்டையில் இந்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தேடுதல் வேட்டை தொடர்கிறது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story