வருத்தமான உண்மை இந்தியாவின் தலைவர் ஒரு திருடன் பிரதமர் மீது ராகுல்காந்தி மீண்டும் தாக்கு


வருத்தமான உண்மை இந்தியாவின் தலைவர் ஒரு  திருடன் பிரதமர் மீது  ராகுல்காந்தி மீண்டும் தாக்கு
x
தினத்தந்தி 24 Sep 2018 11:21 AM GMT (Updated: 2018-09-24T16:51:46+05:30)

ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய பிரதமர் மோடியை திருடன் என்று கூறி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார். #RahulGandhi #PMModi

புதுடெல்லி

பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று உள்ளது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக - காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

ஆனால் பிரதமர் மோடி இதுகுறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. 

சமீபத்தில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலாண்டே, ரஃபேல் ஒப்பந்தத்தை பொறுத்தவரை அனில் அம்பானியின் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பணிகளை மேற்கொள்ள சொன்னது. வேறு எந்த நிறுவனம் குறித்தும் எங்களுக்கு சிபாரிசு செய்யப்படவில்லை. இந்திய அரசு தான் அனில் அம்பானி நிறுவனமான ரிலையன்சுடன் ஒப்பந்தம் செய்ய சொன்னது எனக் கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தினார். 

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலாண்டே கூறிய வீடியோவை பகிர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய பிரதமர் மோடியை திருடன் என்று கூறி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்.


Next Story