“ பிரதமர் மோடி நாட்டுக்குப் பிரதமரா? அல்லது அம்பானிக்கு பிரதமரா?” காங்கிரஸ் கேள்வி


“ பிரதமர் மோடி நாட்டுக்குப் பிரதமரா? அல்லது அம்பானிக்கு பிரதமரா?” காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 25 Sept 2018 8:02 PM IST (Updated: 25 Sept 2018 8:02 PM IST)
t-max-icont-min-icon

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் காங்கிரஸ், மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


புதுடெல்லி,


ரபேல் விமான விவகாரத்தில் காங்கிரஸ் - பா.ஜனதா மோதலில் உச்சமாக, ரபேல் ஒப்பந்தத்தை சீர்குலைக்க ராகுல் காந்தி சர்வதேச சதியில் ஈடுபட்டுள்ளார் என அரசுதரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு பதிலடியாக மத்திய அமைச்சர்கள் அனைவரும் பதில் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பேசுகையில், “ரபேல் விமான கொள்முதல் ஊழல் குறித்து கேள்வியை எழுப்பினால் பா.ஜனதா சேற்றை வாரி இறைக்கிறது. 

காங்கிரஸ் கட்சியின் போது நாங்கள் அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துக்கு நாங்கள் ஒப்பந்தம் கொடுத்தோம். ஆனால், பிரதமர் மோடி அனில் அம்பானியின் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து அம்பானியிடம் கொடுத்துள்ளார். இது குறித்து நாங்கள் விளக்கம் கோரினால், மத்திய அமைச்சர்களும், பாஜகவினரும் தவறான வார்த்தைகளையும், சேற்றை வாரி இறைக்கும் பேச்சுகளையே பேசுகிறார்கள்.

இந்த நாடு அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற கதையை கேட்டிருக்கிறது, இப்போது மோடியும், 40 சகாக்களும் ரபேல் ஊழலுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கேட்கிறது. பிரதமர் மோடி நாட்டுக்குப் பிரதமரா? அல்லது அம்பானிக்கு பிரதமரா?'' என்று கேள்வியை எழுப்பியுள்ளார். 

1 More update

Next Story