பிராந்திய பாதுகாப்புக்கு இந்தியா அச்சுறுத்தலாக உள்ளதாம்: பாகிஸ்தான் சொல்கிறது


பிராந்திய பாதுகாப்புக்கு இந்தியா அச்சுறுத்தலாக உள்ளதாம்: பாகிஸ்தான் சொல்கிறது
x
தினத்தந்தி 16 Oct 2018 1:54 AM GMT (Updated: 16 Oct 2018 1:54 AM GMT)

இந்தியா பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை வாங்கி குவிப்பது தெற்காசியா அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி கூறியதாவது:- தெற்காசிய பிராந்தியத்தில்பாதுகாப்பு தொடர்பாக ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது. 

ஆனால், இந்தியா தனது ராணுவத்தில் பேரழிவு ஆயுதங்களை தொடர்ந்து சேர்த்து வருகிறது. இது தெற்காசியப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதே நேரத்தில் தனது பிராந்திய ஒருங்கிணைப் பகுதிகளை பாதுகாப்பதிலும், இறையாண்மையை காப்பதிலும் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்” இவ்வாறு தெரிவித்தார். 

மேலும், அமைதியை மேற்கொள்ளும் பாகிஸ்தானின் முயற்சிகள் புறம் தள்ளப்பட்டதாக கூறியுள்ள ஆரிப் ஆல்வி, . இந்தியா தான் தெற்காசியாவில் முதல்முறையாக அணு ஆயுத சோதனையை நடத்தி, அணு ஆயுதம் இல்லாத பகுதி என்ற பெருமையைக் கெடுத்தது. அதே நேரத்தில் தெற்காசியப் பிராந்தியத்தை அணு ஆயுதம் இல்லாத பகுதியாக உருவாக்க பாகிஸ்தான் விருப்பத்துடன்தான் உள்ளது” என்றார். 

Next Story