ஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல், இரண்டு வீரர்கள் காயம்


ஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎப்  முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல், இரண்டு வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 16 Oct 2018 2:22 AM GMT (Updated: 2018-10-16T07:52:45+05:30)

ஜம்மு காஷ்மீரில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தின் ககபுரா பகுதியில் சி.ஆர்.பி.எப் முகாம் உள்ளது. இந்த முகாம் மீது நேற்று இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதலில், முகாமில் இருந்த இரண்டு வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. 

இந்த தாக்குதலையடுத்து, நிகழ்விடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் கன்கன் பகுதியில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி, பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மறுதினமே மேற்கூறிய தாக்குதல் நடைபெற்றுள்ளது 

 முன்னதாக, கடந்த வாரமும் புல்வமாவில் உள்ள மற்றொரு சி.ஆர்.பி.எப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு வீரர் காயம் அடைந்தார். 

Next Story