போலீசாரிடம் துப்பாக்கிகளை பறித்த நபர்கள் பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரியை கொல்ல சதி என தகவல்

போலீசாரிடம் இருந்து இரு துப்பாக்கிகளை பறித்து சென்ற 3 பேர் பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரியை கொல்ல சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.
முசாபர்நகர்,
உத்தர பிரதேசத்தின் சாம்லி மாவட்டத்தில் கமல்பூர் பகுதியில் காவல் துறை சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இங்கு போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2ந்தேதி ஆயுதங்களுடன் வந்த சிலர் போலீசாரிடம் இருந்து 2 துப்பாக்கிகளை திருடி சென்றனர். இந்த சம்பவத்தில் 2 போலீசார் காயமடைந்தனர்.
இதன்பின்னர் 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். குருத்வாரா ஒன்றில் இருந்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். இதற்காக போலீசாருக்கு ரூ.50 ஆயிரம் பரிசும் அறிவிக்கப்பட்டது. இந்த கும்பலில் 2 பேர் தப்பியோடி உள்ளனர். அவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அம்ரத் சிங், குர்ஜன் மற்றும் கரண் சிங் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பர்காஷ் சிங் பாதலை கொல்ல அவர்கள் திட்டமிட்டது தெரிய வந்தது. காலிஸ்தான் சுதந்திர முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்புடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story