பாலியல் குற்றச்சாட்டு; காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தேசிய தலைவர் பதவி விலகல்


பாலியல் குற்றச்சாட்டு; காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தேசிய தலைவர் பதவி விலகல்
x
தினத்தந்தி 16 Oct 2018 12:32 PM GMT (Updated: 2018-10-16T18:02:48+05:30)

பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தேசிய தலைவர் பைரோஸ் கானின் பதவி விலகலை ராகுல் காந்தி ஏற்று கொண்டார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் அணியின் தேசிய தலைவராக இருந்து வந்தவர் பைரோஸ் கான்.  ஜம்மு மற்றும் காஷ்மீரை சேர்ந்த இவர் மீது சத்தீஷ்காரை சேர்ந்த பெண் தொண்டர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தனது பதவி விலகல் கடிதத்தினை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கான் அனுப்பியுள்ளார்.  அவரின் பதவி விலகலை ராகுல் ஏற்று கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் பற்றி விசாரணை மேற்கொள்ள 3 பேர் கொண்ட குழு ஒன்றையும் அக்கட்சி அமைத்துள்ளது.  இதனை தொடர்ந்து அந்த பெண் தனது வாழ்வுக்கு தீங்கு ஏற்படும் என்ற அச்சத்தில் நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Next Story