‘இந்த பிரதமரின் கீழ்...’ சி.பி.ஐ. அதிகாரிகள் இடையிலான யுத்தம் விவகாரத்தில் மோடியை கடுமையாக சாடிய ராகுல்


‘இந்த பிரதமரின் கீழ்...’ சி.பி.ஐ. அதிகாரிகள் இடையிலான யுத்தம் விவகாரத்தில் மோடியை கடுமையாக சாடிய ராகுல்
x
தினத்தந்தி 22 Oct 2018 1:54 PM GMT (Updated: 2018-10-22T19:24:56+05:30)

சி.பி.ஐ. அதிகாரிகள் இடையிலான யுத்தம் விவகாரத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.புதுடெல்லி, 

சி.பி.ஐ. இயக்குனராக பதவி வகிக்கும் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக பதவி வகிக்கும் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நிலைக்கு மோதல் சென்றுள்ளது. இருவர் இடையேயும் நிலவும் கசப்புணர்வு, நீண்டகால மோதல் காரணமாகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவ்விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

சிபிஐ மோதல் தொடர்பாக  பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘பிரதமரின் செல்லப்பிள்ளை, குஜராத் பிரிவு அதிகாரி, கோத்ரா சிறப்பு விசாரணை குழு புகழ் சி.பி.ஐ.யில் 2–வது இடத்துக்குள் ஊடுருவினார். இப்போது லஞ்சம் வாங்கியதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த பிரதமரின் கீழ், சி.பி.ஐ. என்பது அரசியல் பழிவாங்கும் அமைப்பாக மாறிவிட்டது. அதன் காரணமாகத்தான் சி.பி.ஐ. எந்த முன்னேற்றம் காண்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் அதிகாரிகள் தங்களுக்குத் தாங்களே யுத்தத்தையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது’’ என்று குற்றம் சாட்டியுள்ளார். 

Next Story