பீகார்: பா.ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் தொகுதி பங்கீடு - சம எண்ணிக்கையில் போட்டியிட முடிவு


பீகார்: பா.ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் தொகுதி பங்கீடு - சம எண்ணிக்கையில் போட்டியிட முடிவு
x
தினத்தந்தி 26 Oct 2018 5:02 PM GMT (Updated: 26 Oct 2018 5:02 PM GMT)

அமித்ஷா-நிதிஷ் குமார் முன்னிலையில், பா.ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி சம எண்ணிக்கையில் தொகுதி பங்கீடு செய்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் தொகுதி பங்கீடு செய்வது தொடர்பாக பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும், ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமாரும் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இதில், பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள தொகுதிகளில் இரு கட்சிகளும் சம எண்ணிக்கையில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இத்தகவலை நிதிஷ் குமார் முன்னிலையில் அமித் ஷா நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘மத்திய மந்திரிகள் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கும், உபேந்திர குஷ்வாகா தலைமையிலான ராஷ்டிரீய லோக் சமதா கட்சிக்கும் உரிய தொகுதிகள் ஒதுக்கப்படும்’’ என்றார்.




Next Story