போபர்ஸ் ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
போபர்ஸ் ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த 1986-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் அரசியல் தலைவர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போபர்ஸ் நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் கடந்த 2005-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியது தொடர்பாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கைகளை நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் துணைக் குழு அண்மையில் ஆய்வு செய்தது. அப்போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க விரும்புவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்த வழக்கில் சிபிஐ, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. சிபிஐ தாக்கல் செய்த இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story