தெலுங்கானா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் மீது ஒவைசி திடுக்கிடும் புகார்


தெலுங்கானா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் மீது ஒவைசி திடுக்கிடும் புகார்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:30 PM GMT (Updated: 2018-11-21T01:43:15+05:30)

தெலுங்கானா சட்டசபை தேர்தலில், ‘எனது கூட்டத்தை ரத்து செய்ய பேரம் பேசினர்’ என காங்கிரஸ் மீது ஒவைசி திடுக்கிடும் புகார் தெரிவித்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 7-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்கு நிர்மல் தொகுதியில் அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இத்தாஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவர் அசதுத்தீன் ஒவைசி எம்.பி., பிரசாரம் செய்தார்.

அப்போது அவர், “இந்த தொகுதியில் நான் பிரசாரத்தை ரத்து செய்தால் ரூ.25 லட்சம் லஞ்சம் தருவதாக காங்கிரஸ் கட்சி பேரம் பேசியது. இது தொடர்பாக இடைத்தரகர் ஒருவர் எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஒருவருடன் தொலைபேசியில் பேசி உள்ளார். அந்த ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது” என்ற திடுக்கிடும் புகாரை கூறினார்.

ஆனால் இந்த புகாரை அந்த தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நிராகரித்தனர்.Next Story