காஷ்மீர் கட்சிகள் பாய்ச்சல் ‘ஆட்சியமைக்க பாகிஸ்தான் உத்தரவு’ என்ற பா.ஜனதா தலைவர் பல்டி!


காஷ்மீர் கட்சிகள் பாய்ச்சல் ‘ஆட்சியமைக்க பாகிஸ்தான் உத்தரவு’ என்ற பா.ஜனதா தலைவர் பல்டி!
x
தினத்தந்தி 22 Nov 2018 12:39 PM GMT (Updated: 2018-11-22T18:09:08+05:30)

காஷ்மீரில் ஆட்சியமைக்க பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது என்ற கருத்தை பா.ஜனதா தலைவர் ராம் மாதவ் திரும்ப பெற்றார்.

 

ஜம்மு காஷ்மீரில் பா.ஜனதாவிற்கு எதிராக மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜனதா, தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைக்க உரிமை கோரிய நிலையில் காஷ்மீர் சட்டசபை நேற்றிரவு திடீரென கலைக்கப்பட்டது. இதுதொடர்பான விவாதம் தொடரும் நிலையில் பா.ஜனதா தலைவர் ராம் மாதவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் உத்தரவின் பெயரிலே மூன்று கட்சிகளும் கூட்டணி ஆட்சியை அமைக்க முன்வந்தது என்ற அவருடைய கருத்திற்கு காஷ்மீர் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.


 உங்களுடைய குற்றச்சாட்டை முதலில் நிரூபியுங்கள் என்று என்று ராம் மாதவிற்கு தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா சவால் விடுத்தார். இருவரும் டுவிட்டரில் கடும் மோதலை மேற்கொண்டனர். மக்கள் ஜனநாயக கட்சியும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில் தன்னுடைய கருத்தை திரும்ப பெறுவதாக ராம் மாதவ் பல்டி அடித்தார். இருதரப்பு இடையே டுவிட்டரில் மோதல் தொடர்ந்த நிலையில் சற்று நேரம் ராம் மாதவ் பதிலளிக்கவில்லை. இறுதியில் அய்ஸ்வாலில் இறங்கியதாக குறிப்பிட்ட அவர், “வெளியிலிருந்து எந்தஒரு அழுத்தமும் கிடையாது என்று நீங்கள் மறுக்கிறீர்கள், என்னுடைய கருத்தை நான் திரும்ப பெறுகிறேன். ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைக்க முற்பட்டு தோல்வியடைந்த தேசியமாநாட்டு காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி உண்மையானது என்று கூறியுள்ளீர்கள், அதனை தேர்தல்களில் போட்டியிட்டு நிரூபிக்க வேண்டும். என்னுடைய கருத்துக்கள் அரசியல் ரீதியிலானது, தனிப்பட்ட தாக்குதல் கிடையாது,” என்றார். 

Next Story