சத்தீஷ்கார்: 2 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் கைது


சத்தீஷ்கார்: 2 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் கைது
x
தினத்தந்தி 24 Nov 2018 9:45 PM GMT (Updated: 2018-11-25T01:19:47+05:30)

சத்தீஷ்காரில், 2 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டைகளை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் பான்சி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் நேற்று காலையில் போலீசார் வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே பதுங்கி இருந்த 2 பெண்கள் உள்பட 3 நக்சலைட்டுகளை அவர்கள் சுற்றிவளைத்து கைது செய்தனர். நக்சலைட்டு இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த இவர்கள் 3 பேரும் கடந்த ஆகஸ்டு மாதம் பான்சி-தண்டேவாடா சாலையில் 2 பஸ்கள் மற்றும் ஒரு லாரியை எரித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஆவர். அந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதைப்போல பர்சூர் பகுதியில் இருந்து மற்றொரு நக்சலைட்டையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய இவரது தலைக்கும் ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story