குழந்தை திருமணத்திற்கு ஆதரவாக பேசிய பா.ஜ.க. பெண் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
குழந்தை திருமணத்திற்கு ஆதரவாக பேசிய பா.ஜ.க. பெண் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் சட்டசபைக்கான தேர்தல் வருகிற டிசம்பர் 7ந்தேதி நடைபெற உள்ளது.
இதற்கான தேர்தல் பிரசார பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், சோஜத் சட்டசபை தொகுதியின் பெண் வேட்பாளராக போட்டியிடும் பா.ஜ.க.வின் சோபா சவுகான் என்பவர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
அவர் பேசும்பொழுது, குழந்தை திருமணம் நடைபெற தடையாக இருக்கமாட்டேன் என கூறினார். தடை செய்யப்பட்ட குழந்தை திருமணம் ராஜஸ்தானில் சில இடங்களில் இன்னும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் சவுகானுக்கு இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
Related Tags :
Next Story