தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை + "||" + Encounter breaks out in Jammu and Kashmir's Shopian

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டத்திற்குட்பட்ட சர்கான் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 2 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. அண்மையில் வந்த தகவலின் படி, துப்பாக்கிச்சூடு நிறுத்தப்பட்டுள்ளது எனவும் சிக்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 


தொடர்புடைய செய்திகள்

1. தற்கொலை படை தாக்குதல் நடத்தி 44 பேரை கொன்ற தீவிரவாதி இவன் தான்
தற்கொலை படை தாக்குதல் நடத்தி 44 பேரை கொன்ற தீவிரவாதி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
2. ஜம்முவில் செல்போன் இணைய தள சேவை தற்காலிகமாக நிறுத்தம்
ஜம்முவில் செல்போன் இணைய தள சேவை தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
3. ஜம்மு காஷ்மீர்: ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது.
5. ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.