இந்திய கடற்படைக்கு மேலும் 56 போர்க்கப்பல்கள் - கடற்படை தளபதி தகவல்
இந்திய கடற்படையில் 56 போர்க்கப்பல்கள் சேர்க்கப்படும் என்று கடற்படை தளபதி சுனில் லன்பா தெரிவித்தார்.
புதுடெல்லி,
இந்திய கடற்படை தினத்தையொட்டி கடற்படை தளபதி சுனில் லன்பா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய கடற்படை கடல்சார் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் இடைவிடாமல் விழிப்புடன் ஈடுபட்டு வருகிறது. தற்போது கடற்படைக்கு 32 போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்பலத்தை மேம்படுத்தும் விதமாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மேலும் 56 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் கப்பல்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தவிர விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்றையும் கடற்படைக்கு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
2050-ம் ஆண்டு 200 போர்க்கப்பல்களையும், 500 போர் விமானங்களையும் கொண்டதொரு உலகத் தரம் மிக்க கடற்படையாக இந்திய கடற்படை உருவெடுக்கும்.
இந்திய பெருங்கடல் பகுதியில் மரபு சார்ந்த அல்லது மரபு சாராத என எத்தகைய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இந்திய கடற்படை தயாராகவே இருக்கிறது. இதன் மூலம் இந்திய பெருங்கடல் எப்போதும் பாதுகாப்பான பகுதியாக வைத்துக் கொள்ளப்படும்.
கடலோர பாதுகாப்பின் ஒரு பகுதியாக கடலில் மீன்பிடிக்கச் செல்லும் 2.5 லட்சம் மீனவர்களின் மீன்பிடி படகுகளை எளிதில் கண்டறியும் வகையில் தானியங்கி கருவி பொருத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இருமுனைகளில் இந்திய கடற்படைக்கு அச்சுறுத்தல்கள் வந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சுனில் லன்பா பதில் அளிக்கையில், “கடலில் நம்மால் பாகிஸ்தானை வெற்றி கொள்ளும் அளவிற்கு பலம் உள்ளது. சீனாவைப் பொறுத்தவரை இந்திய பெருங்கடல் பகுதியில் நமக்கு சாதகமான நிலையே இருக்கிறது. அதேநேரம் தென் சீனக் கடல் பகுதியில் சீனாவிடம் பலம் உள்ளது” என்றார்.

Related Tags :
Next Story