போலீசார் ‘ஷூ’ அணிந்து வந்த சம்பவம்: சபரிமலை சன்னிதானத்தில் பரிகார பூஜை


போலீசார் ‘ஷூ’ அணிந்து வந்த சம்பவம்: சபரிமலை சன்னிதானத்தில் பரிகார பூஜை
x
தினத்தந்தி 19 Dec 2018 8:45 PM GMT (Updated: 2018-12-20T01:11:11+05:30)

போலீசார் ‘ஷூ’ அணிந்து வந்த சம்பவம் காரணமாக, சபரிமலை சன்னிதானத்தில் பரிகார பூஜை நடத்தப்பட்டது.

திருவனந்தபுரம்,

சபரிமலையில் நேற்று முன்தினம் 4 திருநங்கைகள் சாமி தரிசனம் செய்தனர். இதற்காக பம்பையில் இருந்து இருமுடி கட்டுடன் சென்ற அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பாதுகாப்புக்காக திருநங்கைகளுடன் சபரிமலைக்கு சென்ற போலீசார், ‘ஷூ’வை கழற்றாமல் சன்னிதானத்தில் நின்றனர். இந்த சம்பவத்துக்கு பக்தர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் போலீசார் இதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து போலீசாருக்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து, அவர்கள் ‘ஷூ’வை கழற்றிவிட்டு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசாரின் இந்த அவமரியாதைக்குரிய சம்பவம் சன்னிதானத்தை அசுத்தம் செய்து உள்ளதால், சபரிமலையில் பரிகார சுத்திகிரியை பூஜைகள் நடத்த தந்திரி கண்டரரு ராஜீவரு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சன்னிதானத்தில் நேற்று பரிகார சுத்தி கிரியை பூஜைகள் நடந்தது.



Next Story