மே.வங்காளத்தில் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து பாஜக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு


மே.வங்காளத்தில் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து பாஜக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
x
தினத்தந்தி 24 Dec 2018 7:37 AM GMT (Updated: 24 Dec 2018 9:38 AM GMT)

மேற்கு வங்காளத்தில் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக மேல் முறையீடு செய்துள்ளது.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் அமித் ஷா பங்கேற்கும் ரத யாத்திரையை டிச.7-ஆம் தேதி தொடங்க பாஜக திட்டமிட்டிருந்தது. அடுத்தடுத்து 3 ரதயாத்திரைகளை  நடத்தவும், அவற்றில் அமித் ஷா பங்கேற்க உள்ளதாகவும் அனுமதி கோரப்பட்டது. பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி மாநில அரசு அனுமதி வழங்க மறுத்தது.

அதைத்தொடர்ந்து, பாஜக சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அனுமதி வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், பாஜக யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில், யாத்திரைக்கு அனுமதி மறுத்த கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Next Story