ரூ.20 கோடி வங்கி கடன் மோசடி ஆடை நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு


ரூ.20 கோடி வங்கி கடன் மோசடி ஆடை நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு
x
தினத்தந்தி 26 Dec 2018 4:15 AM IST (Updated: 26 Dec 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியை சேர்ந்த குழந்தைகள் ஆடை நிறுவனமான ‘கேட்மாஸ் ரீடெய்ல்’ என்ற கம்பெனியின் தலைமை நிர்வாக இயக்குனராக இருப்பவர் அஷ்வினிகுமார் சாவ்லா.

புதுடெல்லி,

அஷ்வினிகுமார் சாவ்லாவும், நிறுவனத்தின் நிர்வாகிகளும் போலியான வரவு–செலவு கணக்குகளை காண்பித்து ரூ.20 கோடி கடன் வாங்கி திருப்பிச்செலுத்தாமல் மோசடி செய்து விட்டதாக இந்திய யூனியன் வங்கி சி.பி.ஐ.யில் புகார் செய்தது.

இதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் அந்த நிறுவனம், அதன் தலைமை நிர்வாக இயக்குனர் அஷ்வினிகுமார் சாவ்லா, இயக்குனர்களான அவரது மனைவி ஆஷாராணி சாவ்லா மற்றும் ரீனா சாவ்லா ஆகியோர் மீது கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்துவருகிறது.

1 More update

Next Story