டெல்லியில் தமிழ்நாடு இல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரி ஓய்வு


டெல்லியில் தமிழ்நாடு இல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரி ஓய்வு
x
தினத்தந்தி 1 Jan 2019 3:00 AM IST (Updated: 1 Jan 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் தமிழ்நாடு இல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரி ஓய்வுபெற்றார்.

புதுடெல்லி,

தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த ஜஸ்பீர்சிங் பஜாஜ், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லங்களின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றி வந்தார். இவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.

இதையொட்டி அவருக்கு தமிழ்நாடு இல்லத்தில் பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மற்றொரு முதன்மை உறைவிட ஆணையர் என்.முருகானந்தம், துணை ஆணையர் சின்னத்துரை மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜஸ்பீர் சிங்கின் பணியை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story