சீக்கியர்கள் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் சிறையில் அடைப்பு


சீக்கியர்கள் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 1 Jan 2019 3:45 AM IST (Updated: 1 Jan 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

சீக்கியர்கள் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுடெல்லி,

1984-ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. அவர் டிசம்பர் 31-ந் தேதிக்குள் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி, நேற்று டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு அதிதி கார்க் முன்பு சஜ்ஜன் குமார் சரண் அடைந்தார். தன்னை திகார் சிறையில் அடைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை மாஜிஸ்திரேட்டு ஏற்கவில்லை. டெல்லி மண்டோலி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதே சமயத்தில், சஜ்ஜன் குமாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, மண்டோலி சிறையில் சஜ்ஜன் குமார் அடைக்கப்பட்டார்.

இதே வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கிஷன் கோகர், மகேந்தர் யாதவ் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story