டெல்லி புத்தாண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
டெல்லியில் புத்தாண்டு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்து கொண்டாட்டப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகமாக உள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள காற்று தரம் மற்றும் வானிலை ஆய்வு மையம் கடந்த திங்கட்கிழமை திறந்தவெளியில் பொருட்களை எரிப்பது, பட்டாசுகள் வெடிப்பது காற்று மாசை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்தது. சுப்ரீம் கோர்ட்டும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பசுமை பட்டாசுகளை மட்டும் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே கொளுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவையும் மீறி டெல்லியில் பல பகுதிகளில் 31-ந் தேதி மாலையும், 1-ந் தேதியும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளது. இதனால் காற்று கனமானதாகவும், தடிமனாகவும் மாறிவிட்டதாகவும், குறைந்த காற்றோட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் காற்று தர ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் காற்று விரைவாக மோசமடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story