இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல்


இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல்
x
தினத்தந்தி 2 Jan 2019 6:29 PM IST (Updated: 2 Jan 2019 6:29 PM IST)
t-max-icont-min-icon

இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய ராணுவம் இந்த தகவலை மறுத்துள்ளது.


இஸ்லாமாபாத், 


இந்திய உளவு விமானத்தை தங்கள் நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபார் தனது டுவிட்டர் செய்தியில் இது குறித்து கூறியிருப்பதாவது:- “

பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள  பாக் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்தியாவின் ஆளில்லா குட்டி விமானம் பறந்தது. அதை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. சிறிய ரக ஆளில்லா காண்காணிப்பு விமானத்தைக்கூட எங்கள் பகுதியில் பறக்க அனுமதிக்க மாட்டோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ஆனால், இந்த தகவலை இந்திய ராணுவ வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இது போல ஒரு சம்பவம் நடைபெறவில்லை என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story