தேசிய செய்திகள்

மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் உடல்நிலை சீராக உள்ளது - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை + "||" + Union Minister Ravi Shankar Prasad is stable - Delhi AIIMS hospital

மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் உடல்நிலை சீராக உள்ளது - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை

மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் உடல்நிலை சீராக உள்ளது - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் உடல்நிலை சீராக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RaviShankarPrasad #DelhiAIIMSHospital
புதுடெல்லி,

மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு நேற்று திடீரென ஏற்பட்ட சுவாசக்கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளின் மந்திரியாக ரவிசங்கர் பிரசாத் இருந்து வருகிறார். இவருக்கு நேற்று (திங்கள்கிழமை) இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

நேற்று இரவு 8 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்த அவர் அங்குள்ள நுரையீரல் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.   

அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.