லோக்பாலை வலியுறுத்தி ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்


லோக்பாலை வலியுறுத்தி ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 16 Jan 2019 5:29 PM GMT (Updated: 2019-01-16T22:59:24+05:30)

லோக்பாலை வலியுறுத்தி ஜனவரி 30-ந் தேதி முதல் அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் இருக்கபோவதாக அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

லோக்பாலை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி முதல் ரலேகான் சித்தியில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘லோக்பாலை வலியுறுத்தி காந்தி நினைவு நாளான வருகிற 30-ந் தேதி உண்ணாவிரதம் இருக்கவுள்ளேன். காந்தி, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் அவற்றை கடைபிடிப்பதில்லை. நாட்டு மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகிறீர்கள். இதை கண்டித்து எனது கிராமமான ரலேகான் சித்தியில் உண்ணாவிரதம் இருக்க உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.Next Story