காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலி


காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 18 Jan 2019 10:04 PM GMT (Updated: 2019-01-19T03:34:52+05:30)

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

ஸ்ரீநகர், 

லடாக்கின் கர்துங் லா பகுதியில் உள்ள உலகத்திலேயே உயரமான சாலை என்ற பெருமை கொண்ட சாலையில் 2 வாகனங்களில் 10 தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வாகனத்தில் சென்ற அனைவரும் பனிச்சரிவில் சிக்கி புதைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பனிச்சரிவில் சிக்கிய 10 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.


Next Story